மரத்தின் அன்பு :
என்னால் இருக்கையை தர முடிந்த உனக்கு உன்னை வெயில் படாமல் பாதுகாக்க என் இலைகளால் கூரை வேயமுடியாமல் வயதானவன் ஆகி விட்டேனே…
ஒரு சில நேரங்களில் நீ எங்களை அடியோடு சாய்த்தும் விடுகிறாய் .. ஆனாலும் உந்தன் மீது எங்கள் கரிசனம் என்றும் குறையாது என் அன்பே…
ஓய்வு எடு களிறே…. ❣️ - *சுபாஷ் மணியன்*
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
