மரவடிவழகே
மலரின் சிரசழகே
பச்சை தண்டழகே
புரதம், கொழுப்பு, உயிர்ச்சத்து, கனிமங்கள், நார்ச்சத்து என்பவற்றின் உறைவிடமே…
புற்றுநோயாளர்களின் பொக்கிஷமே
இருதயநோயாளர்களின் இன் மருந்தே..
உன்னை சந்தையில் கண்டு ஆசையாய் அம்மாவிடம் நான் கேட்க அம்மாவோ காசு இல்லை என மறுத்துவிட்டாள்…
உன்னை பாடப்புத்தகத்தில் படித்ததைத் தவிர நாவால் சுவைத்ததில்லை இன்றுவரை நானும்…
ஏழைகளுக்கு நீ என்றும் எட்டாக்கனி தானோ…
- ரஞ்சன் ரனுஜா(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
