மருதாணியில் அரிதாரம்
வெள்ளி கொலுசு அலங்காரம்
வடிவழகா உன் பாதம்
எழிலோடு தான் வாழ
தாள் பற்றத் தான் வேண்டும்
கண்ணாடி மேலிருந்து
நீ ஆடும் போது
காலிங்க நர்த்தனம்
நான் காண கூடும்
எழில் கொஞ்சும் பாதம்
இரண்டாக தோன்றும்
காலில் அணி சூடி
நீ ஆடும் போது
என்னை தலை நிமிர செய்யும்
காலணி ஆதிக்க
காயமது மாயும்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
