மோர் மிளகாய்
வத்தக் குழம்பு
சுட்ட அப்பளம்
தயிர் சாதம்
மாவடு இடங்களை
பன் பட்டர் ஜாம்
பீட்சா பர்கர் நூடுல்ஸ்
நவீன உணவுகள்
பிடித்துக் கொண்ட
காலம் இது
இரட்டை ஜடை பின்னி
தோளில் ஒருபுறம்
தொங்கும் மல்லி சூட
பாவாடை தாவணியில்
பார்த்த முகங்கள்
இப்போது சுடிதார்
லெக்கின்ஸ் பாண்ட்
டி-ஷர்ட் நைட்டியில்
வலம் வருகின்றன
காலங்கள் மாறும்போது
கோலங்களும் மாறிப்போச்சே.
க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
