சிரிக்க முத்து உதிரும்
அழுதால் கண்ணீர் முத்து
கழுத்திலே முத்து மாலை
நெற்றியில் வியர்வை முத்து
கையிலே முத்து வளையல்
வாய் திறக்க வார்த்தை முத்து
காதிலே முத்துக் காதணி
விரல்களில் முத்து மோதிரம்
மூக்கில் முத்து மூக்குத்தி
கால்களில் முத்துக் கொலுசு
இதழ்கள் சேர முத்து முத்தம்
மொத்தமா அவள் முத்தம்மா.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
