வெண்மையான நீ, என்னவளின் வெண்மனதை உரைக்க!
பளபளப்பும், மினுமினுப்பும், அவளின் புற அழகை தெரிவிக்க!
அவள் சிந்திய புன்னகையில் தெறித்த உன்னை கோர்த்து,
அவளின் கழுத்திலேயே மாலையாய் அணிவிக்க!
என்னை என்றும் அவள் மறவாதிருக்க என்ன செய்யப் போகிறேனடி
என் முத்தம்மா!
இப்படிக்கு
சுஜாதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
