ஆழ் கடலுக்குள் முங்கி
மூச்சடக்கி
கண்டெடுத்துக் கொண்டு வந்தேன்
சிப்பிகளை
சீர் செய்ய கிடைத்த
முத்துக்களை
அழகழகாக தரம் பிரித்து
கோர்த்தேன்
முத்துச்சரங்களை
அங்காடியில் பார்வைக்கு வைத்திட்டேன்
மங்கை மடந்தை
பேரிளம் பெண்கள்
சங்கு கழுத்தை அழங்கரிக்கவே வாங்கி
செல்ல
ஆடவரும் ஆடவளுக்கு
அணிந்து பார்க்க
விலை கொடுத்து
வாங்கிச் செல்ல
மூச்சடக்கி வந்த முத்து
என் வாழ்வை வளப்படுத்த ஆனந்தம்
நிறைந்தது
அமிர்தம் ரமேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
