மேலை நாட்டவரின் காலை உணவு
மேல் தட்டு வர்க்கத்தின் காலை உணவாக
மாறி வெகு காலம் ஆச்சு
பாமர மக்களின் பழைய சோறை
படித்தவர்கள் மறந்து பலகாலம் ஆச்சு
காய்ந்த ரொட்டியோடு முட்டையும்
சீசும் வெண்ணையிலும் உள்ள சத்தை
புகழ்ந்து பேசுவதை கேட்டு கேட்டு
காது புளிச்சு போச்சு
இட்லி, பொங்கல், வடை,
சட்னி சாம்பாரில் உள்ள சத்துக்கள்
ஏன் நமக்கு மறந்து போச்சு..
- அருள்மொழி மணவாளன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)