ரயிலோர ஜன்னல் சீட்டில்..,
ரகசியமாய்..,
காற்று வந்து காதோரம்
கதை சொல்ல.,
நான் ரசித்த பயணம் அது.,!!
சக பயணியின்.,முதல் சிரிப்பில்.,
அறிமுகம் சொல்லி..,
காற்று வந்து ,
அனுமதி இல்லாமல்.,
கூந்தல் முகவரிகளை கலைத்துப்போக.,
நான் ரசித்த பயணம் அது.,!!
தொடரியின் தொடர்ஓட்டத்தில்.,,
மனது எங்கோ ..,
தொலைந்து போக.,
காற்று வந்து மெல்ல தேகம் வருட.,
நான் ரசித்த பயணம் அது.,!!
மெல்லிய இசையின்
மேல் மாடத்தில்.,
நான் லயித்துப்போக.,
ஒரு கைக்கார கள்ளி போல.,
காற்று என்னை
களவு கொண்டு போக.,
நான் ரசித்த பயணம் அது.,!!
அந்த பயண பெட்டியில்.,
எங்கள்
மூச்சுக்காற்று நிரம்பி நிற்க.,
பயணம் முடிந்து வழியனுப்பி
பிரியும் போது.,
இனம் புரியா வலி.,!!
காற்றும் இப்போது.,
கலைந்து போயிற்று.,
சக பயணிகளைப் போல.,!!
குமரி உத்ரா
கன்னியா குமரி.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)