வறண்டு போன பூமி
நினைவுபடுத்துகிறதே
நீரில்லா ஆறுகள்
உடைந்த காதலர் இதயம்
ஏழைக்கு உதவாத செல்வம்
துணையிழந்த முதுமை
ஆதரவற்ற பெற்றோர்
கீழ்வானம் சிவந்து
மழைக்காக காத்திருக்கிறது
நம்பிக்கை நட்சத்திரமாக.
- க.ரவீந்திரன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
