வலிகள் பலகண்டு
ஒரு உயிரின் உயிர்
மூச்சை அளந்து வந்தது
ஒரு புதிய உயிர்
சுமந்தவள் சுமையிறக்கி
சுகபட்டாள்
அவ் உயிரின்
மூலகர்த்தா
ஆனந்தமழையில்
நனைந்தான்
உற்றார் உறவினர்
மகழ்ச்சி வெள்ளத்தில்
மூழ்கினார்கள்
ஆனால்
அவ் உயிர்
இவ்நரக பூமியில்
நனட பெறும்
விதி விளையாட்டுக்கு
தயார் ஆனது…
M. W kandeepan❤️🙏
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
