அடம் பிடித்து உன் விரல்களை
படம் பிடிக்க விரதமிருந்தேன்,!
பிரம்மன் தேர்வெழுதி வடித்த
உன் விரல்களின் நகத்தின் மேல்
செயற்கை சாயம் எதற்கடி,;!
வானவில்லின் வண்ணங்களை
ஒன்று சேர்த்து படைத்து விட்டான்
உன் விரல்கலை,;!
பிரம்மனின் கூற்றுப்படி
நீயே அவன் தவப்புதல்வி,;!
உனை சுமந்தவளுக்கு தான்
புரியும் உனை பெற்றது
ஏழு ஜென்ம வரம் என்று,!
விரல்களை விட்டு பிரிய மனமின்றி
வானவில்லும் வண்ண வடிவங்களில்
வலையமிட்டு தன்னுள்ளேயே
தஞ்சமடைந்து விட்டன,!
இந்த விரல் பிடிப்பவர்கள் பல
ஜென்ம பாக்கியம் செய்திருக்க
வேண்டும் படைக்கப்பட்டவனால்.!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
