வாழை தோட்டத்திலே;
வண்ண பூக்களின் மத்தியிலே;
நீரோடையின் நடுவிலே;
வண்ணமில்லா
வெண் நுரை மூட்ட மிட்ட
தொட்டியின் மேலே;
இளவேனில் கதிரவன்
ஒளியிலே;
நுரை முட்டை காற்றில்
கரைய துள்ளியாடும்
பால் முகம் மாறா
என் தூயவனே…!
உனை அள்ளி அரவணைக்கவே
இப்பிறவி கண்டேனடா…!
மனம் மயக்கும் மல்லிகை
மொட்டை அள்ளி முடிந்து,
வெண் நிற ஆடையில் நானும்,
வெண் நுரை ஆடையுடன் நீயும், குளியலாடும்
உன் அழகை காண
இரு கண்கள் போதாதடா;,,,
உன்னோடு துள்ளி விளையாட
ஏங்காத மனம் ஏதடா….
கொள்ளை அழகை அள்ளி
கொட்டி செய்த என்
உயிர் ஓவியம் நீயடா….!!!
✍️ ஆர்.இலக்கியா சேதுராமன்.
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
