வாழ்க்கையின் அத்துணை
தருணங்களையும்…….
அழகாய் மீட்டெடுப்பாய்!
ஆனந்த நினைவுகளை
அலையாக அள்ளித் தெளிப்பாய்!
தொலைந்து போன நாட்களின்
சந்தோஷச் சாரல்களை
உயிர்ப்பிப்பாய்!
ஊடகத்துறையில் உன் பணியோ
அளப்பரியது.
உலகெங்கும் நடக்கும் சிறு
அசைவு கூடத் தப்பாது
உன் கண்களுக்கு!
எத்துணை சம்பவத்துக்கு
நீ சாட்சியானாய்!
பலரது கண்ணீருக்கு
நீ காட்சியானாய்!
கயவரது கரங்களில்
நீ வில்லனானாய்!
பல பெண்களின் வாழ்வை
நீ சீரழித்தாய்!
அறிவியல் உலகின் ஆதிக்க
நாயகனே!
ஆக்கத்திற்கும் நீ!அழிவிற்கும் நீ!
அன்புக்கும் நீ!ஆசைக்கும் நீ!
கலைக்கும் நீ!கொலைக்கும் நீ!
யாதுமாகி நிற்கின்றாய் நீ!
நீ என்ன செய்வாய் பாவம்?
இயக்குபவன் மனிதனா? மிருகமா?
உனக்குத் தெரியாதே!….
சிறிய கற்பனைதான்! ஒரு வேளை,
உனக்கு மனித மனத்தைப் படிக்கும்
சக்தி கிடைத்தால்………
இறைவனிடம் வேண்டிக்கொள்!
மனிதம் எங்குள்ளதோ அங்கு மட்டுமே இயங்க வரமளி என்று.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
