வியப்பாய வியப்பு
கண்ணாடிக் குடுவையில்
கனலாகக் கதிரவனை
ஓடும் நதியை
மோதும் முகிலை
வானளாவிய மலைகளை
செயற்கையாக …..
இதென்ன விந்தையா ???🤔
மண்ணை உண்ட வாயில்
ஈரேழு புவனம்
அகில அண்டம்
அதிலே கோகுலம்
யசோதா நந்தர் என
மாதவனைக் கண்ட
யசோதையின் வியப்பாய வியப்பே வியப்பு
பத்மாவதி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
