விரல்களில் இத்தனை வனப்பா!
என் மதி மயக்குது சிறப்பா!
பிறை நிலவாய் இருக்கும் நகத்தில்
வண்ணம் இருக்கு வனப்பா!
மூங்கில் குழலாய் இருக்கும் விரலில்
கணையாழி அணிவது கலையா?
அணிக்கு அணி சேர்க்கும் கலையில்
சுட்டுவிரலில் கணையாழி களையா?
நிலவில் களங்கம் பிழையா
பிழையே நிலவுக்கு அழகா?
அவள் விரல் மேல் விரல்
வைத்திருக்கும் தோரணம்
எனக்கு விரக தாபம் கூட்ட
அதுவே முதல் காரணம்
கணையாழி கையில் கொண்டு
அவள் திருமுகம் தேடுகின்றேன்
கடல் தாண்டிய வாணரம் போல்
அவள் விரல் காட்டும் திசையில்
ஓடுகிறேன்
சர் கணேஷ்
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
