அதில் அழகிய நகச்சாயம்,மேலும் அழகூட்ட வைர மோதிரங்கள்..
காண்பதற்கென்னவோ…….
அழகாகத்தான் இருக்கிறது.
அப்பாவின் வீட்டில்……
இளவரசியாக வலம் வரும் வரை….
ராஜாவின் ராணியான பின்போ
கை நகங்கள் காணாமல் போகும்!
ஏன்? கைரேகை கூட அழிந்து
போகலாம்…… தேய்த்து தேய்த்து!
இது நடுத்தர வர்க்கம்…..
கடைநிலை என்றாலோ…
சிறு பிராயத்திலேயே………
கடுமையான. உழைப்பில்,
கைகள் காய்த்துப் போய்விடும்!
அம்பானி பரம்பரையா?!
ஆயுள் வரை தக்க வைக்கலாம்.
ஆனாலும் முதுமை என்னவோ
வெற்றிதான் பெற்றுவிடும்.
மு.லதா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
