உன் புன்னகை ஒன்றே
போதுமடி உன் பிரிவுக்கான
வலி நிவாரணியாக…
கடுகடுக்க வலிகின்ற கால்கள்…
நெஞ்சை தொட்டு நிற்கின்ற
தாகம் ஒன்றாவது
விற்க வேண்டுமென
ஆர்வம் கழுத்தோர டை யை
சரி செய்து சிரிக்கிற
மனிதனின் கால் வலிக்கு
நிரந்தர தீர்வு
விற்பனை என்றாலும்,
தற்காலிக தீர்வென்பது
தே நீரோடு இந்த
வலி நிவாரணியும் தான்.
அதித குளிர் உடலுக்குள்…
அது தரும் அதித
வலி வெளிக்குள்…
சம்பிரதாய தற்காலிக தீர்வு
அதுவும் குளிராக…
கடுகடுக்கும் கால்
வலியை தீர்க்கும்
தற்காலிக வலி நிவாரணி
உன் அலை பேசியின்
குறுஞசெய்தி இதோ
வந்துவிட்டேன்…
அரை நாள் கால் கடுக்க
காத்திருப்பு அரை நிமிட தரிசனம்
கடவுள் கண் திறந்தார்
வலி பறந்தது வழி பிறந்தது…
கங்காதரன்