படித்ததில் பிடித்தது: திறமையான கணவன்

by Nirmal
82 views

கணவனிடம் சண்டை போட்டு கொண்டு அம்மா வீட்டுக்கு மனைவி சென்று ஒரு மாதம் ஆகி விட்டது.

மனைவியின் நினைவால் வாடிய கணவர், தொடர்ந்து அலைபேசியில் தொடர்பு கொள்ள, ஒரு நாள் மனைவி போனை எடுத்து “ம்ம்..சொல்லுங்க.. என்ன வேண்டும்..?”

உடனே கணவர், “வீட்டுக்கு வாம்மா..!”என்று கணவர் கண் கலங்கியபடி கூப்பிட்டார்.

உடனே மனைவி கணவனுக்கு போதனை செய்ய நினைத்து, “உள்ளே போய் ஒரு டீ கப்பை எடுத்து வாங்க..!”என்றாள்.

கணவரும் எடுத்து வர, அதை கீழே போட சொன்னாள் மனைவி.

கணவரும் கீழே போட்டார்..

மனைவி “பார்த்தீர்களா..? இப்போ கப் எத்தனை துண்டுகளாக உடைந்திருக்கு..? அப்படித்தான் நீங்கள் என்னை திட்டியது.. ஒட்ட முடியாது..”

கணவர் சிரித்துக்கொண்டே “ம்.. உன்னை எனக்கு நல்லா தெரியும்.. கப்பை நீ சொல்லியது போல கீழே போட்டேன்மா… ஆனால் அது உடையவே இல்லை. ஏன்னா அது பிளாஸ்டிக் கப் என்று சொன்னார்.

மனைவி, “சரிங்க.. மாலை வந்து என்னை நம்ம வீட்டுக்கு கூட்டி போங்க..”என்றார்.

கணவர் மகிழ்ச்சியில் தன் திறமையை மெச்சிக்கொண்டார்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!