பழமொழி போட்டி கதை: உடன்பிறப்பு

by admin 2
31 views

எழுதியவர்: இரா.நா. வேல்விழி

பழமொழி: மின்னுவதெல்லாம் பொன்னல்ல

அர்த்தம்:

அத்தை , அத்தை என்று எப்போதும்  இரஞ்சிதம் பின்னே சுற்றிக் கொண்டிருப்பான் மணியன்.பார்ப்பவர்கள் எல்லாம் அண்ணன் மகன் மேல் இத்தனை பாசத்தை வைக்க முடியுமா என்று வியந்து தான் போவார்கள். தன் பிள்ளைகளைக் கூட மறந்து விட்டு  மணியனுக்கு வேண்டியதை பார்த்து பார்த்து செய்வாள் இரஞ்சிதம். அவனும் அத்தை வீட்டிற்கு வந்து விட்டால் அம்மா,அப்பாவையுமே மறந்து விடுவான். மணியனின் அப்பாவும் இப்படி ஒரு உடன்பிறப்பு யாருக்குக் கிடைக்கும் என்பதில் பலமுறை தன் மனைவியிடம் கூறி பெருமைப்பட்டு இருக்கிறார். நாட்கள் இப்படியாக பாச மழையில் கடந்தும் கரைந்தும் கொண்டிருந்தது. ஒருநாள் அதிகாலையில்   அண்ணனிடமிருந்து போன் வந்தது இரஞ்சிதத்திற்கு. உடனே கிளம்பி ஊருக்கு வருமாறும் ஒருமாதம் தங்க வேண்டி இருப்பதால் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு வருமாறும் கூறியிருந்தார். இரஞ்சத்திற்கு ஒன்றும் விளங்கவில்லை . அவள் கணவனும் அண்ணன் தங்கை பாசத்தை அறிந்து இருந்ததால் ஒன்றும் சொல்லாமல் உடனே கிளம்புமாறும் கூறினார். அண்ணன் வீட்டிற்கு வந்தவளை ஓடிவந்து கட்டிக் கொண்டு அழுதான் மணியன். அவனைத் தூக்கி சமாதானம் செய்தவள் , அண்ணனிடம் சென்று என்ன செய்தி , ஏன் அவசரமாக என்னை வரச் சொன்னாய், குழந்தை எதற்காக இப்படி அழுகிறான் என்று மூச்சு விடாமல் கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனாள். அண்ணனும் துக்கம் தாங்காமல் அழுது கொண்டே தன் மனைவி படுத்திருக்கும் அறைக்கு அழைத்துச் சென்றார்.அங்கே சோர்ந்து படுத்திருந்தாள் அண்ணி.பார்த்து இரண்டு மாதத்திற்குள் இப்படி இளைக்க முடியுமா? ஓடிச் சென்று அண்ணியின் அருகில் அமர்ந்தவள், அடக்க முடியாமல் அழுது விட்டாள். அழுகை சத்தம் கேட்டு கண் விழித்த அண்ணி  வந்துட்டியா இரஞ்சிதம் உனக்காக தான் உயிர கையில புடிச்சிட்டு இருந்தே… எம் புள்ளைய உன்னை விட யாரு நல்லா பாத்துக்க மாட்டாங்க .அவன உங்கிட்ட ஒப்படைச்சா தான் என் உசுரு நிம்மதியா போகும்… என்று கூறி முடிப்பதற்குள் இருமல் அதிகமாகி இரத்த வாந்தி எடுத்து மயக்கமாகி விட்டாள் அண்ணி. ஒன்றும் புரியாமல் அண்ணே என்ன ஆச்சுண்ணே அண்ணிக்கு ஏண்ணே இரத்த வாந்தி எடுக்கறாங்க … என்று உலுக்கி எடுத்து விட்டாள் இரஞ்சிதம். ஆமா இரஞ்சிதம் அண்ணிக்கு புற்றுநோய் இருந்துருக்கு .அது அவளுக்கு என்னான்னு தெரியல …வயிறுல  புண்ணாகி இரத்தம் வருதுன்னு அசால்ட்டா விட்டுட்டா அது ரொம்ப முடியாம போனதுக்கப்புறமா தான் எங்கிட்டையே சொன்னா டாக்டருக்கிட்ட கூட்டிட்டு போகும் போது கிட்டதட்ட  எல்லா இடத்திலையும் பரவிடிச்சு இனிமே காப்பாத்த முடியாது ஆனா  இறப்ப கொஞ்சம் தள்ளி போடலாம்னு சொல்லி ஆஸ்பத்திரியில் சேர்க்க சொன்னாரு .இங்க இந்த இரண்டு மாசமா போராடிட்டு இருக்கறா. பணத்தை எல்லா செலவழிச்சி வீட்டையும் அடமானம் வைச்சும் எந்த பிரயோஜனமும் இல்ல . டாக்டர் இனிமேல் இங்க இருந்து காச செலவழிக்காதீங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்கன்னு சொல்லிட்டாரு . இதையெல்லாம் நீ தாங்க மாட்டேன்னு தான் நான் உங்கிட்ட சொல்லல. ஆனா வந்ததும் அவ உன்ன கண்டிப்பா பாக்கணு சொன்னதால போன் பண்ணினேன் . என்று கூறிய படியே தன் மனைவி வாந்தி எடுத்ததைத்  துடைத்து சுத்தம் செய்து , மெல்ல அமரவும் வைத்தார்.தினமும் இக்காட்சியை பார்த்துக் கொண்டே இருந்த மணியன் சற்று ஆறுதல் அடைந்தவனாய் அத்தையின் முந்தானையை இறுக பிடித்துக் கொண்டு நின்ற மகனை பார்த்தவாறே சிறிய புன்னகையுடனே சிலை போலவே அமர்ந்திருந்தாள் அண்ணி. போம்மா இரஞ்சிதம் அண்ணிக்கிட்ட போய் பேசு என்றவர் முன்னே செல்ல இரஞ்சிதத்தின் கால்கள் பின்னே செல்ல பிள்ளை பிடித்திருந்த முந்தானையையும் இழுத்து சொருவிக் கொண்டவளாய் செய்வதறியாது  முழித்து நிற்கையில்,  இரஞ்சித…. அண்ணி நம்மள விட்டுட்டு போயிட்டாமா என்று அலறினார் அண்ணன். அண்ணியின் காரியங்கள் முடிந்து வீட்டிற்குப் புறப்படத் தயாராகி வந்தவளிடம் மணியனும் கிளம்ப தயாரானான் . ஒரு மாதமாக அண்ணன் பணத்திற்கு பட்ட கஷ்டத்தைப் பார்த்து கொண்டிருந்தவள் வாய் திறந்து எதையும் சொல்லவில்லை .அண்ணனும் கேட்கவில்லை .இன்று கிளம்பியவளை,   ஏம்மா இப்பவே கிளம்பற இருந்துட்டு போம்மா என்றவளிடம் இல்லண்ணே அங்க அவரு சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவாறு அதனால நா கிளம்புகிறே என்றவளிடம் அத்தை நானும் ரெடியாய் இருக்கே .போலாம்  அத்தை. அப்பா நா இனி மேல் அத்தைக் கூடவே இருந்துக்கறே நீங்க வேணா வந்து பாத்துட்டு போங்க என்றான் மணியன் குழந்தையாய்.  அண்ணே மணியன பாத்துக்க. நான் கிளம்பற இவன எங்கூட வைச்சுக்க முடியாது. என்னம்மா  இப்படி சொல்லிட்டே .உங்கிட்ட இருந்து இத நா எதிர்பார்க்கவே இல்லை…அவன கூட்டிட்டு போக சொல்லி நா சொல்லவும் இல்லையே. ஆனா நா சொல்றதுகுள்ள அவசர அவசரமா நீ சொன்னதுக்கான காரணத்தை தெரிஞ்சுக்கலாமா…வெந்த புண்ணுல வேல பாய்ச்சிட்டியே ….என்ற அண்ணனிடம் போதும் நிறுத்துண்ணே  ….அப்பா அம்மா இருக்கும் போது இந்த வீட்டுல எனக்கும் பங்குண்டு அந்த வீட்டை எது பண்ணாலும் எங்கிட்ட  சொல்லிட்டு தானே செய்யணும்னு சொன்னாங்க ஆனா எனக்கு தெரியாம அடமானம் வைச்சதோட இப்ப வீட்டை வில பேசியிருக்க .இவ்வளவு நாளும் உனக்கு ஒரே பையன் , அவன் வளர்ந்ததுக்கப்பறம் என் பொண்ண அவனுக்கு கட்டி வைச்சா மொத்த சொத்தும்  நமக்கே வந்துடு அப்படிங்கறதுனால இத்தனை நாளும் இதையெல்லாம்  பொறுத்துகிட்டே .இனிமே உங்கிட்ட ஒன்னுமே இல்லைன்னு தெரிஞ்சதுக்கப்பறம்  உன்னையும் உம் மகனையும் நா பாக்கணுங்கறது எனக்கு என்ன தலை எழுத்தா…..போ போ எங்கையாவது மூட்டைக் தூக்கி அப்பனும் மவனும் பிழைச்சுக்கங்க. கூட பிறந்த பாவத்துக்கு செய்ய வேண்டிய காரியத்தை கூட இருந்து பாத்துகிட்டே அவ்வளவு தான். என்றவள் தரகர் குரல் கேட்டு திரும்பினாள் .ஐயா பத்திரம் கிரயமாயிடுச்சிங்க .உங்க பத்திரத்தை வாங்கனவுங்க கிட்ட கொடுத்துட்டேனுங்க. இந்த பெட்டியில தோப்பு வித்த பணமும் , மாந்தோப்பு பத்திரமும் இருக்குங்க என்றார். நன்றி தரகரே அதை அப்படி இரஞ்சிதங்கிட்ட கொடுத்துடுங்க. என்றவர் இரஞ்சிதம் என்ன விட உன் அண்ணி உன்ன ரொம்ப நம்பினா.   ஆனா காசுக்காக இந்த பிஞ்சு குழந்தையோட பாசத்தையே  கொன்னுட்டியே ….நா உனக்கு துரோகம் பண்ணுவேன்னு எப்படி நினைச்ச… அடமானம் வைச்சேன்னு சொன்னே எந்த வீட்டைன்னு சொன்னனா.அவ போனதுக்கப்பறம் எல்லா சொத்தையும் வித்து பணத்தை உங்கிட்ட கொடுத்துட்டு மணியனையும் உங்கிட்ட விட்டு போயிடலான்னு தான் இவ்வளவு அவசரமா செஞ்சே .ஆனா நான் சொல்றதுக்கு முன்னாடியே உன்னோட சுயரூபம் இது தானுன்னு உனக்கு உணர்த்திட்டே  .அப்பா இருந்தா உனக்கு என்ன செஞ்சி இருப்பாரோ அது மேலேயே நா என் மகளுக்கு செஞ்ச சந்தோஷத்தோட  மணியனுக்கு இனிமே தாயுமானவனா நானே இருந்து பாத்துக்கறே .என்று சொல்லியவாறு அவள் பதிலுக்குக் கூட காத்திருக்காமல் மணியனை அழைத்துக் கொண்டு தங்கையின் இயல்பை அறிந்து வெம்பியவராய் வீட்டை விட்டு வெளியேறினார் அண்ணன்.

முற்றும்.

📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!