எழுதியவர்: வாசவி சாமிநாதன்
பழமொழி: “ காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய்”
பாலா, மாலா, ஹேமா மூவரும்
கல்லூரியில் படிக்கும் மாணவிகள்
எங்கு சென்றாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள்
வழக்கம் போல மூவரும் கழிப்பறைக்கு செல்ல முடிவு செய்தனர்
அக்கா, ஹேமா வாங்க போகலாம் என்று அழைத்தாள் மாலா
எங்க பாலா என்றாள் ஹேமா
ரெஸ்ட் ரூமுக்கு போயிட்டு வரலாம் என்றாள்
சரியென்று மூவரும் கிளம்பினர்
அக்கா பாத்ரூம்ல தண்ணி வரல என்றபடி கழிவறை விட்டு வெளியே வந்தாள் மாலா
ஹேமாவும் பாலாவும் கழிப்பறைக்கு வெளியே கருத்திருந்த இருவரும்
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்
அப்படியா வங்க போகலாம் என்று நகரத் தொடங்கினாள் பாலா.
இரு பாலா நான் பார்த்துட்டு வாரேன்
என்றாள் ஹேமா
அக்கா எப்ப நான் எதச் சொன்னாலும் நம்ப மாட்டீங்க என்று
கோபித்துக் கொண்டாள் மாலா
ஹேமாவிற்கு எப்பவும் அடுத்தவங்க சொல்றத ஏத்தக்க மாட்டாள் விடு பாலா ஹேமாவே போயி பார்க்கட்டும் என்றாள் பாலா
அப்படி இல்ல பாலா நான் என்ன சொல்றேன் என்றாள் என்றப்படி பார்க்க பாலாவும் மாலாவும் ஹேமாவை பார்த்து முறைத்தனர்
ஹேமா விடுவதாக இல்லை
கழிவறைக்கு சென்று குழாயை திருகியதும் தண்ணீர் வந்தது
பார்த்ததும் ஹேமாடிக்கு மகிழ்ச்சி
ஏய் இரண்டு பேரும் இங்க வாங்க தண்ணீர் வருது என்றாள் ஹேமா
முற்றும்.
📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.