பழமொழி போட்டி கதை: யாசகம்

by admin 2
61 views

எழுதியவர்: உஷாராணி

பழமொழி: காலம் பொன் போன்றது.

அப்பா… என்று வீடே அதிருப்படி பூஜா கத்தி அழுதாள்.

அவளைத் தொடர்ந்து ‘என்னங்க.” எங்களை விட்டு போயிட்டிங்களே. என்று அவர் மீது விழுந்து கதறினாள் பூஜாவின் தாய் காவேரி.

சம்பத் இறந்த செய்தி அறிந்து அக்கம்பக்கத்தினர் சிலர் ஓடோடி வந்தனர்.

என்னாச்சி என்று சிலர் ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டனர்.

சிலரோ, எப்ப எடுப்பார்களாம் என்று தன் காரியத்திலே கண்ணா இருந்தார்.

“”யோவ்.. எப்ப எடுத்தா உனக்கென்ன..?

போய் பார்த்து விட்டு வந்துடு.

இல்ல. இன்னிக்கே எடுத்தால், ஆபீஸுக்கு போவதர்க்குள் போய்ட்டு தலை முழுகி விடுவேன். இல்லை யென்றால் காலை தான்… என்னால் இரண்டு நாளும் தலை முழுக முடியாது. சைனெஸ் இருக்கு. ஒப்புக் கொள்ளாது””” என்று தன்னிலையை பறைசாட்டினார்.

ஒரு பேக்கேஜா இறுதி சடங்கை செய்வதற்கு ஆட்கள் இருந்ததால், பெண்கள் இருவருக்கும் சிரமம் இருக்க வில்லை.

அவர்களே ஷாமியானா போட்டு, நாற்காலிகளை வர வழைத்து, சங்கு ஓதுவார், மேளம் அடிப்பவர் என்று சகலத்தையும் பார்த்துக் கொண்டனர்.

அக்கம் பக்கத்தினர். மற்றும் ஒரிரு நண்பர்களை தவிர உறவுகள் ஒருவரையும் காணவில்லை.

வந்தவர்களுக்கெல்லாம் அம்மா காவேரி,’ என்னனு தெரியல. கோவிலுக்கு போக வேண்டும் என்றார்.
இன்று எங்களுக்கு திருமண நாள்.

சரி மூவரும் போவோம் என்று கிளம்பினோம்.

காலையிலே வீட்டில் சர்க்கரை பொங்கல் வைத்து சாமி கும்பிட்டோம். மறுபடியும் சாமி கும்பிட பூஜை யறைக்குள் போனார். அப்படியே சாய்ந்து விட்டார்.

இரண்டு வீடு தள்ளி இருக்கிற டாக்டரை பூஜா வரவழைத்து பார்த்தாள்.

நாடி பார்த்து விட்டு, இறந்து விட்டார் “”என்று சொல்லிவிட்டு போனார். என்று சளைக்காமல் சொன்னார்.

அவருக்கு சுகர், B.P என்று எதுவுமே இல்லை என்றும் சொன்னாள்.

யார் வந்து கேட்டாலும் சளைக்கவே இல்லை.

முக்கிய நண்பர்கள் வந்ததும், ‘“என்னங்க உங்களை பார்க்க முக்கியமானவர்கள் எல்லோரும் வந்து இருக்கிறார்கள். எழுந்து பேசுங்க. என்று கதறி அழுதாள்.

ஒவ்வொருவரும் நான் பார்த்து, 10 வருடம் இருக்கும். 6 வருடம் இருக்கும் என்றே சொன்னார்கள் . இப்படியே சொன்னர்கள்.

எல்லோரும் சம்பத்துக்கு ஏற்பட்ட மன அழுத்தமே இந்த 65வயதில் போக காரணம் என்று முடிவு செய்தனர். .

காவேரிக்கு ஆதங்கமே , நண்பர்கள் உற்றார் உறவினர்கள் ஒருவரும் வருவதில்லை.

அது யார் தப்பு என்றெல்லாம் யோசிக்க வில்லை.

அவரவர் வாழ்க்கை, அவரவர் தக்க வைத்துக் கொள்ளவே போராட வேண்டியுள்ளது.

நண்பர்களுடன் நட்பு பாராட்டுதல் , மகிழ்ந்து ஒன்றாக வெளியே செல்லுதல், தன் மனக்குறைகளை பகிர்ந்து கொள்ளுதல் என்று எதுவுமே இல்லாமல் போயிற்று.

அங்கு வந்த நண்பர்கள் நால்வரும் “இனிமேல் நாம் இப்படி இருக்கக் கூடாது. மாதத்துக்கு ஒரு முறையாவது சந்தித்து கொள்ள வேண்டும்.” என்றார்.

‘“படிக்கும் போது ஒன்றாக இருந்தோம்.

குடும்பம் ,குழந்தை வேலை என்றான பின் அதன் பின்னே ஓடிக் கொண்டியிருந்தோம்.

இப்போது நம் பேரக்குழந்தைகள் பின்னே ஓடிக் கொண்டியிருக் கிறோம்.

நமக்கென்று பொது ஆசைகளை வைத்துக் கொள்ளாமல் போய் விட்டோம். நம் நிலமை பரவாயில்லை.

இவன் நிலமை தான் கஷ்டம் என்று கிசுகிசுப்பாக பேசினர்.

என்னப்பா செய்வது …….

எங்கே உறவுகள் ஒருவரையும் காணவில்லை.

இவன் திருமணத்தன்றே முறிந்த உறவுகள்.

இதே 35 வருடங்கள் போச்சு . பேச்சு .வார்த்தை கிடையாது. முகம் பார்த்தல் கிடையாது. அனைவரும் ஒதுங்கி விட்டனர்.

இவனும் வீம்பாக இருந்து விட்டான். ஒருவரும் தேவையில்லை என்று. இவன் செய்து கொண்ட காதல் திருமணம். எல்லோரையும் இவ்வளவு வருடங்கள் வீம்பு பிடிக்க வைத்துள்ளது “”என்றனர்.

பூஜாவிடம் கேட்டனர்.

எங்கம்மா உன் சித்தபா , பெரியப்பா. அத்தைகள் ஒருவரையும் காணவில்லை. செய்தியை சொன்னாயா….?

பெரியப்பாவும், சித்தப்பாவும் இறந்து விட்டார்கள். அதற்கும் எங்களுக்கு சொல்லவில்லை. அத்தைகள் மட்டும் பணம் தேவைபடும் போது போன் செய்து கேட்பார்கள். அப்பாவும் அனுப்பி வைப்பார்.

நான் இதுவரை முகம் கூட பார்த்தது இல்லை. நான் என்ன பாவம் பண்ணேன் .என்னை அப்பாச்சி கூட பார்க்க மறுத்து விட்டாராம். “ என்று சொல்லும் போதே அழுதாள்.

ஏன் அங்கிங் இத்தனை வருடங்களாக வா பகையை மனதிலே வைத்து இருப்பார்கள். என் அப்பா அப்படி என்ன தப்பு செய்து விட்டார்.

என் அம்மா பக்கத்திலிருந்தும் உறவுகள் இல்லை. அவர்களும் எங்களை ஒதுக்கி விட்டார்கள்.

நண்பரின் மனைவி அவளை தேற்றினார்.

விடும்மா. உன் அப்பா அம்மாவையும், உன்னையும் மகாராணி இளவரசி போல வைத்து இருந்தார். இருவரும் எவ்வளவு அன்னியோன்யமாக வாழ்ந்தார்கள் தெரியுமா. உன் அம்மா வாழ்ந்தது நிறைவான வாழ்க்கை . இதற்கெல்லாம் கலங்காத”” என்று ஆறுதல் சொன்னார்.

அப்பாவுக்கு எல்லோரும் வேண்டும். உறவுகளிடத்தில் யாசகமா கேட்டது அவர்களது உறவைத்தான்.

அதற்கும் கொடுப்பினை இல்லாமல் போய் விட்டது.

யாரோ அக்கம்பக்கத்தினர் வரும் ஓசை கேட்டதும் கண்களை துடைத்துக் கொண்டே சென்று விட்டாள்.

நண்பர் ஒருவர் இவர்களுக்கு நான் தான் திருமணம் செய்து வைத்தேன்.

ஒரு நாள் இரவு ,இருவரும் என் வீட்டிற்கு ஓடி வந்தனர்.

காவேரியின் பெற்றோர் சாதிவெறி பிடித்தவர்கள் எங்களை கொன்று விடுவார்கள் என்று என்னிடம் அடை கலம் தேடி வந்தனர்.

இருவருக்கும் குன்றத்தூர் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.

கொஞ்ச வருடங்கள் கத்தாரில் வேலை செய்தான். அதற்குள் எல்லாம் அடங்கினர்.

எங்கு இருக்கிறான் என்பதை ரகசியமாகவே வைத்துக் கொண்டான்.

பூஜா பிறந்ததும்,அம்மா பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டான்.

அந்தம்மா மறுத்து விட்டார்.

என்னப்பா அப்படி ஒரு கோபம்.

என்ன செய்வது.

இவனை நம்பித்தான் இவன் குடும்பம் இருந்தது. அப்பா இல்லை. சிறுவயதிலே இறந்து விட்டார்.
அண்ணனும் | அம்மாவும் ..அனைவரையும் கரை சேர்த்தனர். இவன் மட்டும் தான் நல்லா படித்து நல்ல வேலையில் இருந்தான். இவனும் அவர்களுக்கு நல்லாவே செய்தான். அக்கா தங்கைக்கும்
திருமணம் செய்தான். தம்பிக்கு படிப்பு ஏறவில்லை. எதோ கடை வைத்து கொடுக்கச் சொன்னார்.
அக்கா தங்கை திருமண செலவே இவனால் ஈடு கொடுக்க முடியவில்லை. தம்பிக்கு எங்க போவான்

இதற்கிடையில் அலுவலகத்தில் இவனுடன் வேலை செய்த கன்னட பெண் காவேரியை காதல் செய்ய அது வீட்டார்க்கு தெரிந்து எதிர்த்தார்கள்.

காவேரி வீட்டினரோ அடி உதை என்று ஆரம்பித்தார்கள்.

அது பொறுக்க முடியாமல் காவேரி ஓடி வர , , இவன் திருமணம் செய்ய வேண்டியதா போயிற்று.

இவன் குடும்பமே தத்தளித்தது அண்ணனுக்கு பெரிய சம்பளம் கிடையாது. தம்பியும் எலக்ட்ரிஷியனாக
சம்பாத்யம் போதவில்லை.

நம்மை நடு தெருவில் நிறுத்தி விட்டு போய் விட்டானே என்ற மன குமறல்.

அது அப்படியே காவேரி மீது திரும்பியது.

அது துவேஷமாக மாறியது. வீம்பு பிடித்து காலத்தை போக்கினர்.

பணத்தையும் எடுத்துக் கொண்டு தனியே போனான். முகத்தில் விட்டெறிந்து வீட்டை விட்டு துரத்தினர்.

அவ்வளவு தான். இவனும் மனமொடிந்து அவர்கள் பக்கமே திரும்ப வில்லை.

அம்மா இறப்புக்கு கூட இவனுக்கு செய்தி சொல்லவில்லை.

காலம் போனது.

சகோதரிகள் மட்டும் இவனிடம் பணம் தேவைபடும் போது மட்டும் பேசினர். இவன் மனைவி , பூஜாவிடம் முகம் கொடுப்பதில்லை.

இப்போது இரண்டு அல்லது மூன்று வருடங்கள் இருக்கும் கூட பிறந்த அண்ணன் | தம்பி இறப்புக்கு கூட போகவில்லை.

வேறொரு நண்பர், அது மட்டும் அவன் மன அழுத்தத்திற்கு காரணமில்லை.

மகள் திருமண வாழ்க்கையா பற்றியா..

ஆமாம்.

உறவுகள் இல்லை என்று சொல்லித் தான் திருமணம் செய்தான். அதையே பெருங் குத்தமாக சொல்லி, சொல்லி பூஜைவை ரணகளமாக்கினர். இதனால், பணம் கேட்டு தொல்லை வேறு. பொறுத்து பார்த்தாள்.

கணவனிடமிருந்து விவாகரத்து வாங்கிக் கொண்டு வீட்டில் இருக்கிறாள்.

அதுவும் மன உளைச்சல்தானே

எனக்கென்னவோ இப்போது எல்லாம் சரியாகும் என்று தோன்று கிறது என்று நண்பரின் மனைவி சொல்ல.

எங்கங்க… அவர்கள் வீட்டிலிருந்து ஒருவரும் வரவில்லை.

தகவல் சொல்லியாச்சி.

மனிதாபிமானம் இல்லாதவர்கள்.

சங்கு ஊதும் சத்தம் கேட்டது.

அனைவரும் மெளனமாயினர்.

பூஜா அவர்களிடம், ‘பெரியப்பா, சித்தப்பா பிள்ளைகளிடம் செய்தி சொல்லி இருக்கிறேன்.

நான் யார் என்று கேட்டார்கள். என்னை அறிமுக படுத்திக் கொண்டேன்.

அத்தைகள் போனே எடுக்கவில்லை.

ஒருவர் தயங்கிய படியே…அவளிடம்| இவ்வளவு வருடங்களாக இல்லாத உறவு இப்போது ஏன் வேண்டும்
என்கிறாய்.

அப்பாவின் மனக்குமறல் அங்கிள்.

இறப்பதற்கு முன் எல்லோரும் ஒன்று சேர வேண்டும் என்ற ஆசையை மனதிலே பூட்டி வைத்துக் கொண்டார். அவ்வப்போது அது ஆதங்கமாக வெளிப்படும்.

நானும் படித்து முடித்த பின் US போய் விட்டேன். நினைத்த காரியத்தை தள்ளி போட்டேன்.

காலத்தை வீணடித்தேன்

முயற்சி செய்து இருக்கலாம்.

அம்மாவின் வீட்டாரிடமும் பேசி இருக்கிறேன்

வருகிறார்களா என்று பார்ப்போம்.

நானும் யாசகம் போன்றே கேட்கிறேன்.

அப்பாவை இறப்பை அழுது தீர்த்தால் போய் விடுமா.. அவரின் ஆசையை நிறைவேற்றுவதும் ,அவர் , வழி நடப்பதும் தானே என் கடமை . அவரின் ஆன்மா சாந்தி அடைய என்னாலான முயற்சிகள் செய்வேன்.

இன்று பேசி, இன்றே அனைவரும் வர வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் சரியில்லை அங்கிள். பிறகும் முயற்சி செய்வேன்.

உன் கணவன் வீட்டார்.

அவர்கள் திருந்தி வந்தால் ஏற்றுக் கொள்வேன் .நான் அவனை விட்டு பிரிந்த பிறகு அந்த பிரிவை அவனால் தாங்க முடியவில்லை. அக்கம்பக்கத்தினரின் ஏளன பேச்சுக்கள் வேறு . எனக்கு நம்பிக்கை
இருக்கு. அவன் வருவான். எனக்கும் | அவனுக்கு மே மறுமணம் புரிவதில் விருப்பமில்லை.””

பூஜாவிடம் “” டைம் மாயிடுச்சி. எடுக்கலாம் என்று வந்தனர்.

அந்த வேலையை கவனிக்க போனாள்.

அவனை குளிப்பாட்டி வாய்கரிசி போடும் போது , ஒரு காரிலிருந்து 7,8 பேர் வந்தனர். முக ஜாடையே அவர்கள் யார் என்று தெரிந்தது.

இன்னொரு காரிலிருந்து கணவன் வீட்டார் வந்தனர்.

காவேரியின் கண்கள், தன் வீட்டார் யாரும் வருகிறார்களா என்று ஏக்கமாக பார்த்தாள்.

குமறி,குமறி அழுதாள்

கோடி துணி கூட கொடுக்க ஒருவரும் இல்லையே. என்ன பாவம் செய்தேன் என்று அவள் தலையில் தண்ணீர் ஊற்றும் போதே கண்ணீர் கரைந்தது. கணவன் முகத்தையே பார்த்தாள்.

இத்தனை வருடங்கள் என்னை சக தோழியா , மனுஷியா | கம்பீரமா வாழ்க்கை நடத்தியதற்கு கணவனுக்கு நன்றி சொல்லி கைதொழுதாள்.

உடல் வலிமையும், செல்வமும் மட்டும் மனிதனுக்கு வெற்றியை தேடி தராது. செய்யும் செயல்தான்
வெற்றிக்கு அடிப்படடை. காலம் கருதி செய்வதே வெற்றியை கொடுக்கும். ஏனெனில் காலத்தை
தவற விட்டால் மீண்டும் பெற முடியாது. எனவே காலம் பொன் போன்றது என்றனர் நமது முன்னோர்கள்.

காவேரிக்கும் கோடி துணி கிடைக்கும்.

முற்றும்.

📍பழமொழி கதை போட்டியில் கலந்து கொள்ள இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!