எழுதியவர்: பிரகதாம்பாள்
எனக்கு ஒரே மகள் அவளுக்கு நான் எப்போதும் பேசும் போது உறவினர்களோ மற்ற நண்பர்களோ எங்கேயாவது தொட்டால் அது எது குட்டச் எது பேட் டச் என்று விரிவாக விளக்கி இருக்கிறேன்.
அவள் ஒருமுறை ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் இருந்த கணித ஆசிரியர் அவளை தனியாக கூப்பிட்டு கன்னத்தையும் முதுகையும் தடவி ஏதோ பேச அவள் உடனே அவர் செய்வது பேட் டச் என்று உணர்ந்து கொண்டு “நீங்கள் என்னை இப்படி எல்லாம் தொடுவதை நான் என் அம்மா அப்பாவிடமும் தலைமை ஆசிரியருடன் சொல்லிவிடுவேன்” என்று மிரட்ட அந்த ஆசிரியர் பயந்து கொண்டு சாரி சொன்னதாக என் வீட்டிற்கு வந்ததும் என் மகள் சொன்னாள்.
நாம் நம் வீட்டில் வளரும் ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ வளர்க்கும் நேரத்தில் அவர்களிடம் பாலியல் என்றால் என்ன அது எவ்வாறு பெண் குழந்தைகளுக்கு நேரிடுகிறது என்று சொல்லிக் கொடுத்தாலே எதிர்காலத்தில் சமூகத்தில் பாலியல் குற்றங்கள் கண்டிப்பாக குறைத்து விடலாம்.
நம் வீட்டில் வளரும் ஆண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகளின் அருமையையும் அவர்கள் எப்படி சிறந்தவர்கள் என்றும் சொல்லி வளர்த்தாலே நிச்சயம் அப்படி வளரும் ஆண்மகன் இனி எந்தவித பாலியல் செயல்களையும் செய்யாமல் இருப்பதற்கு அதிகமான வாய்ப்பு உண்டு.
என் மகள் பள்ளியில் நடந்து கொண்ட விதத்தை நான் கேள்விப்பட்டவுடன் அவளுக்கு தைரியமும் தெம்பும் சொல்லி இது போல் தான் தைரியமாக இருக்க வேண்டும் என்று சொன்னவுடன் அவள் மகிழ்ச்சியுடன் புரிந்து கொண்டாள்.
முற்றும்!..
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.