நீல வானின் இரவில்
நகரத்தின் நிசப்தம் கண்ணாடித் திரையில்
கட்டிடங்களின் உச்சிகள்
ஒளியின் கோபுரமாய்
ஆடம்பர அறையின் அணைப்பில்
மெத்தையின் வெதுவெதுப்பில்
தனிமையின் நிழல் விழுந்திருக்க
பணத்தின் பிரம்மாண்டம்
சாளரத்தின் வெளியேயும் உள்ளேயும்?
இரவு நீள, நகரம் உறங்க
மௌனத்தின் மொழி
சொல்வதென்ன?
திவ்யாஸ்ரீதர் 🖋
படம் பார்த்து கவி: பிரம்மாண்டம்
previous post