இளம் எழுத்தாளர் திரு.நந்தா லக்ஷ்மனின் வேசியின் ருசி புத்தகத்தின் கதாபாத்திரங்கள் சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்தன.
இக்கதையை நகர்த்தி சென்ற விதம் ரொம்பவே அழகாக இருந்தது. இந்த சமுதாயத்தால வேசிகள்னு அழைக்கப்படுகிற ஒவ்வொரு பெண்ணிற்க்கும் இந்நூல் ஒரு வகையில் சமர்ப்பணம். பிறைமார்பன், நதிக்கரையன் என்கிற இயற்கையோடு இயைந்த பெயர்களை கதாபாத்திரத்திற்க்கு வைத்தது சிறப்பாக இருந்தது. சீதாவின் கதாபாத்திரமும், சுப்பிரமணி தன்னுடைய காதல் மனைவிக்கு தர விரும்பிய காதலை (என் அன்பின் இலக்கணத்தை காற்று படாமல் காப்பாற்றி சிறிதும் கசிந்து விடாமல் என் மனைவிக்கு பரிசளிக்க காத்துக் கொண்டிருக்கிறேன்) என்ற வரிகளால் காதலுக்கே காதலூட்டியுள்ளார். திருமணமென்பது ஆண் பெண் ஒன்றாக இணைந்து வாழ்வதிலும், உடலுறவிலும், வெறும் ஊருக்காக, (காமத்தின் பரிசாக மட்டுமே) குழந்தையை பெற்றெடுத்து விட்டு அதற்கு குடும்பம் என்னும் பெயர் வைத்து வெறுமனே பெயரளவில் மட்டுமே பல குடும்பங்கள் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நம்ம சமூகத்தால கட்டமைக்கப்பட்ட தேவையில்லாத பல ஆணிகள் தான் இங்க திருமணத்த தீர்மானிக்கிறது. அக்கட்டமைப்பை அவரின் கற்பனைக் கதாபாத்திரமான சுப்பிரமணி மாற்ற முயன்ற விதம் 💯. இருவரில் பெரும்பான்மையாக (ஆணுக்கு மட்டும்) உடல் பசியை தீர்த்துக் கொள்ளக்கூடிய ஒரு Licenced அமைப்பாகத் தான் திருமணங்கள் இன்றளவும் இருக்கின்றன. மனப் பசி பற்றிய உணர்தலே அவ்வமைப்பில் இல்லை. “உணர்தல் என்பது புரிதலை விட மிக உயர்ந்தது” என்பது எவ்வளவு ஆழமான ஓர் வாக்கியம்.
புத்தக உலா போட்டி: ஆனந்தி
previous post