கோவையில் சமூக இலக்கிய வாசிப்புத் தளத்திலிருந்து இயங்கிவரும் சிறுவாணி வாசகர் மையம், மறைந்த எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் .கோவையை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இந்த மையம் ‘மாதம் ஒரு நூல்’ என தனது உறுப்பினர்களுக்குச் சிறந்த நூல்களைப் பதிப்பித்து அளித்து வருகிறது.
.தேசத்திற்கோ, எந்தவொரு பால், இன, மத, சாதி, மொழிக்கோ எதிரான கருத்துகள் இடம்பெறக் கூடாது. கதைகளின் காப்புரிமை ஆசிரியர்களையும் புத்தகக் காப்புரிமை பதிப்பகத்தையும் சார்ந்தது.
“ரங்கராஜன் ஒரு கர்மயோகி. குமுதம் ஸ்தாபன விசுவாசம்.ஆசிரியர் எஸ்.ஏ.பி மேல் பக்தி. கிடைத்தது போதும் என்கிற திருப்தி. சக எழுத்தாளர்கள் மேல் பொறாமையற்ற பரிவு, நேசம்,வெள்ளைச் சட்டை, வெள்ளை வேட்டி. நண்பர்களைக் கண்டால் கட்டியணைத்து முதுகில் ஒரு ஷொட்டு – இவை இவருடைய சிறப்புகள்” சுஜாதா.
இவர் 1500-க்கும் மேற்பட்ட கதைகளையும் , 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும் எழுதியுள்ளார். இவற்றுள் பல குமுதம் ஆனந்த விகடன் முதலான இதழ்களில் தொடர்களாக வெளிவந்தன.
ரா. கி. ரங்கராஜன் (அக்டோபர், 5, 1927 – ஆகஸ்ட் 18, 2012) என்னும் ராயம்பேட்டை கிருஷ்ணமாச்சாரி ரங்கராஜன் ஒரு தமிழக எழுத்தாளர் மற்றும் இதழாளர். வரலாற்றுப் புதினங்கள், குற்றக் கதைகள் கட்டுரைகள், வேடிக்கை நாடகங்கள், மொழிபெயர்ப்புகள், குறும்புக் கதைகள், நையாண்டிக் கவிதைகள் எனப் பல பாணிகளில் எழுதியுள்ளார்.