புத்தக பெயர் : கருவாச்சிகாவியம்
எழுத்தாளர் : வைரமுத்து
பிடித்த கதாபாத்திரம் : கருவாச்சிகாவியம்
என்ன நினைத்து படைத்தாரோ
இப்படி ஒரு அரும்படைப்பை
என்னற்ற கருவாச்சிகளை கடந்துவிட்ட
இச்சமூதாயம் என்றாவது
துடித்திருக்குமா அவர்களின் வலி கண்டு
இத்தனை இடர்களையும் தாங்க
கருவாச்சி என்ன கடவுளா ?
என்போருக்கு சொல்லாமல் சொல்லிவிட்டார்
கருவாச்சி ஒர் பெண்
ஆம்
ஆக்கம்,காத்தல்,அழித்தல் என
அத்தனைக்கும் தனிதனி
கடவுள் என்றிருக்க
கருவாச்சி தனி ஒரு பெண்ணாக
ஈன்றெடுத்தால் தன் மகனை
தன்னை தவிக்கவிட்ட கணவன்
உட்பட அத்தனைபேரையும் காத்துவிட்டாள்
தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களை
அழித்து விட்டாள்
முத்தொழிலையும் முத்தாய்பாய்
செய்தவளை எங்கனம் கடவுளுடன்
ஒப்பிடுவது
எத்தனையோ கருவாச்சிகள்
நம்முடனே வாழ்கின்றனர்
நாம் கவனிக்க தவறினால்
கடவுளை மிஞ்சிய கருவாச்சிகளை
புத்தக உலா போட்டி: சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன்
previous post