புத்தகம் : ஏழு தலைமுறைகள்
கதாபாத்திரம் : குண்ட்டா
கி.பி 1750 ஆம் ஆண்டு. மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டின் மிக தொலைவிலுள்ள ஜப்பூர் என்ற கிராமத்தில் தான் அவன் பிறந்தான். மவுல்வியார் “உமரோ – கிண்ட்டே ஆகியோரின் பிள்ளையின் பெயர் குண்ட்டா” என்று அறிவித்தார். “புலிகள் சிங்களை விட கொடூரமான பூச்சாண்டி ஒருத்தன் இருக்கான். அவன் வெள்ளையன். அவனோட கருப்புக் கருங்காலிங்களும் இருப்பாங்க. நம்மள பிடிச்சிட்டு போய்ருவாங்க” என்று ஊரிலுள்ள பெரியவர்கள் சொல்வதை கேட்டு வளர்ந்த குண்ட்டாவுக்கு தெரியவில்லை தானும் வெள்ளையன் கையில் அகப்படுவோம், கருப்பர்களின் பைபிள் என சொல்லப்படும் ஏழு தலைமுறைகள் புத்தகத்திற்கு தானே ஆரம்பம் என்றும். சிறுவயதிலிருந்து ஆணாக வளர்ந்த சமயத்தில் தான் அவர்களிடம் அகப்பட்டான். இவனுடன் இன்னும் சில கருப்பர்களை கடத்தி சென்ற வெள்ளையன் கப்பலின் அடித்தளத்தில் இவர்களை அடைத்து பல சித்திரவதைகளை செய்தான். வெள்ளையன் மண்ணில் எண்ணூத்தி ஐம்பதுக்கு விற்கப்பட்டான் 20 வயது குண்ட்டா. பல சித்திரவதைகளை அனுபவித்தான். வாலர் துரையிடம் தன்னை போன்று அடிமையாக இருந்த பெல் என்பவளை திருமணம் செய்து கிஜ்ஜி என்ற பெண் குழந்தையை பெற்றான். கொடுமைகளையும் வலிகளையும் அனுபவித்த குண்ட்டாவின் வம்சாவளி பற்றி சொல்லும் ஏழு தலைமுறைகள் புத்தகம் எழுதிய அலெக்ஸ் ஹேலியும் அவனுடைய வம்சாவளியே. வெற்றியாளர்களே வரலாற்றை தீர்மானிக்கிறார்கள் என்பதை மாற்றிய இந்த புத்தகத்தின் ஆரம்ப கதாபாத்திரம் குண்ட்டா. என் நினைவில் இன்றும் வாழ்கிறான். என்றும் வாழ்வான்.
புத்தக உலா போட்டி: சு. ரகுநாத்
previous post