என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரம் என்பதை விட என்னை மிகவும் பாதித்த கதாபாத்திரம் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலின் கங்கா கதாபாத்திரம். நாவலின் தொடக்கத்தில் எவற்றையெல்லாம் கங்கா அருவருப்பாய் பார்த்தாளோ இறுதியில் அவற்றையெல்லாம் செய்பவளாய் கங்கா மாறிப் போய் இருப்பாள்.
இளம் வயதில் அறியாத ஒருவனிடம் கற்பை இழக்கிறாள்.இந்த சமூகத்தால் கேலி செய்யப்பட்டு ஒதுக்கப்படுகிறாள்.பல வருடங்கள் கழித்து மீண்டும் அவனை சந்திக்கிறாள்.
அவனுடன் இணைத்து இந்த சமூகம் தன்னை பேசுவதை நினைத்து சந்தோஷப்படுகிறாள். அவனோடு ஏதாவது ஒரு உறவில் இருக்க விரும்புவதை வெளிப்படையாக அவனிடம் கூறுகிறாள்.
அவன் வேண்டாம் என்று ஒதுங்கிப்போகும் போது தன்னை முழுவதுமாய் தண்டித்துக் கொள்கிறாள். குடித்துக் கூத்தடிக்கிறாள்.
இந்த சமூகம் மேலும் தன்னை இழிவாய் பேசும்படி மாறி போகிறாள்.
கங்கா மீது எனக்கு இருக்கும் கோபம் எல்லாம் அவனை தண்டிப்பதை விட்டு ஏன் உன்னை தண்டித்துக் கொண்டாய்?
புத்தக உலா போட்டி: சோ.சிவசங்கரி நெல்சன்
previous post