புத்தக உலா போட்டி: த. கயல்விழி

by Nirmal
58 views

சேர தாண்டவம் என்னும் நாடகத்தில் இரண்டாம் நாயகி, நதியில் மிதந்து வந்த சேரனை கரை சேர்த்து  பாதுகாத்து உருகுலைந்த பாகங்களை சரி செய்ய பணிவிடைகள் செய்து வந்தாள். செய்யும் பணிவடையில் சிலிர்த்து போய்  நட்புக் கொள்ளும் வேலை காதல் உருவாகியது. தான் யார் என்று அறியாத நிலையில் நெய்தலின் அன்பு மன்னன் மனதிற்கு அமைதியை தந்தது. இருவரும் அன்பு உறவாடி அடுத்த அடி எடுத்து வைக்கும் வேளையிலே, கணவனை இழந்து காடு மேடு தேடி அலைந்து கலங்கரை விளக்கமாய், மன்னன் இருப்பிடம் இதுவென்று அறியாமலே வந்து சேர்ந்தாள் ஆதிமந்தி. உற்றவன் ஒரு கொண்டு முன் நிற்க, இருவருமே ஈருடல் ஓர் உயிராய் மனமகிழ்ந்து நின்றிருந்தனர். இதை கண்ட நெய்தலையோ! உற்ற காதலை ஊரார் முன் கூற மனமின்றி வெதும்பி நின்றாள். மனம் உற்றவளுக்கு மன்னவன் உறித்தானவன் என்றெண்ணி,பிரிந்த நங்கையை புரிந்தவனோடு சேர்த்து வைத்தாள். நதி கொண்டு வந்தவனை பிரியா விடை கொடுத்து அந்த நொடி! பிரிவுத் துயர் ஆற்றாது பிரித்தெடுத்தான் அவள் உயிரை இறைவன்.  தான் உற்ற காதலினை அறத்தோடு நின்று உற்றவளுக்கே வழி விட்டு உயர்ந்தவள் ஆனால்  நெய்தலி. பெண்களின் காதலுக்கு ஒரு இலக்கணமாய்!!!

You may also like

Leave a Comment

error: Content is protected !!