நூலகங்கள் மற்றும் புத்தகக் கடைகளின் அலமாரிகளை நிரப்பும் எண்ணற்ற புத்தகங்களில், எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று:
கல்கியின் பொன்னியின் செல்வன். இந்த புத்தகத்தில் வரும் மறக்க முடியாத கதாபாத்திரம்: வந்தியத்தேவன்.
காரணம்:
கதாநாயகன் வந்தியத்தேவன் நாவல் முழுக்கத் தன்னுடைய துடுக்குத்தனம், நகைச்சுவை, வார்த்தை ஜாலம், வீரம், காதல்,குறும்பு, சுறுசுறுப்பு, ஆர்வம், கோபம், நேர்மை, பொய், உண்மை என்று நம்மைக் கவர்ந்து இருப்பார்.
இளைய ராணியாக வரும் நந்தினியிடமும், சக்கரவர்த்தியின் மகளான குந்தவையிடமும் இவர் பேசுவதைப் படிக்கும் போது கல்கியின் வார்த்தை விளையாட்டுகளை நினைத்து பிரமிப்பாக இருக்கும்.