வைரமுத்து அவர்கள் எழுதிய கருவாச்சி காவியம் நாவலில் வரும் கருவாச்சி கதாபாத்திரம் என்னை மிகவும் பாதித்த ஒரு கதாபாத்திரம்.
கருவாச்சி காவியம் படித்து முடித்து விட்டேன். என் மனதின் பல கேள்விகளுக்கு விடையாய் இருந்தது கருவாச்சியின் வாழ்க்கை. கிராமத்தின் சுவடும் வாசமும் கொஞ்சமும் மாறாமல் பெரும் வாழ்வியலை நமக்கு நூலாக வடித்து தந்த கருப்பு வைரம் வைரமுத்துவுக்கு நன்றிகள்…!!! படித்து இரண்டு ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தாக்கம் இருக்கிறது மனதில்.
படிப்பு இல்லாத, அனுபவமில்லாத ஒரு கிராமத்து தேவதை தன் சிறு வயதிலேயே பெரும் வேதனைகளையும்,வலியையையும் சுமக்கிறாள். இந்த வேதனைகளை பரிசளித்த கணவனின் இறுதி காலத்தில் அவனை எல்லோரும் நிர்கதியாய் விடும் போதும் பழி தீர்க்காமல் தன்னோடு அழைத்து செல்லும் போது கருவாச்சி நம் கண்களை குளமாக்கி விடுகிறாள்.
நிச்சயம் நம் வாழ்நாளில் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டிய நூல். கருவாச்சி காவியம் படித்து முடித்த போது எழுந்த தாக்கத்தில் எழுதியது. இதை வாசிக்கும் போதெல்லாம் கருவாச்சியின் வாழ்க்கை காட்சிகள் மனக்கண்ணில் திரைப்படமாக ஓடும்.
முத்து முத்தா உன் கதைய எழுதிபுட்டாரு வைரமுத்து…!!!
பித்துப்பிடிச்சு நிக்குது படிச்ச இந்த குருத்து மனம்…!!!
கருவாச்சி காவியம் படிக்கவேண்டியது இல்ல..!!! வாழ வேண்டியது…!!!
வாழ்ந்து போன கருவாச்சிக்கும்…!!! இன்னும் கருவாச்சியாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும்.,கருப்பு வைரத்திற்க்கும் சமர்ப்பணம்…!!!
புத்தக உலா போட்டி: மீ.யூசுப் ஜாகிர்
previous post