வணக்கம்.
என் மனம் கவர்ந்த கதாபாத்திரம் என்பதை விட மனதளவில் பாதித்த கதாபாத்திரம் என்றே சொல்லவேண்டும் ‘சம்பத்’தை. எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய “உறுபசி” நாவலில் வரும் கதாபாத்திரமே அது. ஒரு மனிதன் எந்த ஒரு வரையரைக்குள்ளும் அடங்காமல் தன் மனம் செல்லும் பாதையில் எந்த ஐயமுமின்றி பயணித்ததின் விளைவுகளே இக்கதை. தன் நண்பர் குழுவில் தனித்துவமான ஒருவனாக தன் சிந்தனைகளையும் செயல்களையும் வெளிப்படுத்தி விளங்குகிறான். அத்தகை ஒருவனின் மறண சம்பவத்திலே கதை தொடர்கிறது. கதை முழுவதும் நண்பர்களின் எண்ண ஓட்டங்களாகவும், விவாதங்களாகவும் விரிகிறான் சம்பத்.
நன்றி
புத்தக உலா போட்டி: ம. ஜெனோ
previous post