மெல்ல மெல்ல நடக்கும்
பார்வையில் பாவம் பொங்கும்
நிழலுக்கும் நெஞ்சம் நடுங்க
அஞ்சும் சுட்டிப் பூனை
வீட்டுக்கு வீடு ஓடி
தினமும் பாலைத் தேடி
பானை நிறையப் பார்த்ததும்
புயலாய் பாயும் பூனை
துரத்தும் நாயைக் கண்டு
கண்கள் நெருப்பு கழலென
கால்களில் முழு வேகத்தோடு
வீரத்தில் புலியாகிய பூனை
துன்பம் வந்தால் துடிப்போடு
அச்சமின்றி தலையை உயர்த்தி
“பூனைதானே” என நகைத்தவர்கள்
முன்பு வலியை வென்று
புலியாக வாழும் பூனை
வலிமை உருவத்தில் அல்ல,
முடிவு எடுக்கும் தருணத்தில் மட்டும் தான் தெரியும்…
யாரெல்லாம் பூனை…. யாரெல்லாம் புலியென!
நா.பத்மாவதி
கொரட்டூர்
படம் பார்த்து கவி: புலியான பூனை
previous post