மகரந்தத்தின் பழம் 

by Nirmal
130 views

பல்வேறு பூக்களின் மகரந்தங்கள் இணைந்து உருவாகும் பழம்தான் அன்னாசிப்பழம். அதனால்தானோ என்னவோ இப்பழத்திற்குப் பலவித உடல்நலக் குறைவுகளைச் சரி செய்யும் தன்மை உள்ளது.

அன்னாசிப்பழத்தின் சிறப்பு ‘ப்ரோமிலைன்’ என்ற காம்ப்ளெக்ஸ் பொருள். இதற்குப் பல வகை என்சைம்கள் இணைந்து செய்யக்கூடிய செயல்களின் ஆற்றல் உள்ளது.

‘ப்ரோமிலைன்’ உடல் எடையைக் குறைக்கும் சக்தி கொண்டது. ஜீரண சக்தியை நன்கு தூண்டக்கூடியது. அதோடு உடலில் ஏதேனும் இரத்தக்கட்டு, வீக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் அவற்றை சீர் செய்யும் தன்மை ‘ப்ரோமிலைனு’க்கு உண்டு.

அன்னாசிப் பழத்தைத் தோல் சீவிய பிறகு வில்லைகளாக நறுக்கிச் சாப்பிடுவோம். அப்போது வில்லைகளின் நடுப்பாகத்தை, கட்டையாக உள்ளது என்று சாப்பிடாமல் எறிந்து விடாதீர்கள். அந்த நடுப்பகுதியில்தான் அதிக அளவில் ‘ப்ரோமிலைன்’ உள்ளது.

நம் உடலின் நச்சுப் பொருட்களை நீக்கும் ‘ஆன்டிஆக்சிடன்ட்’ வைட்டமின் ‘சி’ சத்தில் உள்ளது.
அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம்.

அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ‘சி’ சத்து நிறைய இருப்பதால் இதனைச் சாப்பிடுவதால், நீரிழிவால் ஏற்படும் இருதய பாதிப்பு, ஆஸ்துமாவினால் ஏற்படும் மூச்சுத் திணறல், ஆசனவாயில் ஏற்படக்கூடிய புற்றுநோய் ஆகியவை நிகழாமல் இருக்கும்.

வைட்டமின் ‘சி’ யுடன் ‘மாங்கனீஸ்’ தாதுப்பொருள், வைட்டமின் ‘பி’, தையாமின் போன்றவையும் இப்பழத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள க்வீன் ஸ்டான்ட் மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தில் நடத்திய ஆராய்ச்சியில் அன்னாசிப்பழம் மார்பகம், சுவாசப்பை, ஆசனவாய், ஓவரிகளில் ஏற்படும் புற்றுநோய் கட்டிகளை உருவாகாமல் கட்டுப்படுத்த பெரிதளவில் உதவுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அன்னாசிப்பழம் உடல் சூட்டினை அதிகரிக்கக்கூடியது. அதனால் இதனை அளவாகச் சாப்பிடலாம். தயிருடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

பழரசமாக, நீர் சேர்த்துச் சாப்பிடலாம். மற்ற காய்கறி சாலட்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம். கர்ப்பிணிப் பெண்களும், மூல நோய் உள்ளவர்களும் இப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!