எழுதியவர்: இந்துமதி நடராஜன்
மெய் எழுத்து வார்த்தை: அக்கா/க்
அந்த திங்கட்கிழமை பொழுது யாருக்கு நல்லதாக விடிந்ததோ தெரியாது, ஆனால் பாவம் சுமதியின் குடும்பத்திற்கு பெரிய இடி போன்ற செய்தி வந்தது.
அப்பா ஹார்ட் அட்டாக் வந்து இறந்து விட்டார் என. 3 பெண்கள், 1 ஆண் என நான்கு குழந்தைகள் அவருக்கு. பெரியவள் சுமதி டிகிரி முடித்து இப்போது தான் சம்பாதிக்க ஆரம்பித்து இருந்தாள்.
எதிர்பாராத இந்த மரணம் எல்லோரையும் சுனாமியாய்த் தாக்கி நிலைகுலைய வைத்தது. கொஞ்சம் அழுகை ஓய்ந்த பின் சுமதி ஒரு முடிவெடுத்தாள்.
அழுது அழுது ஓய்ந்து இருந்த தன் தங்கைகள்,தம்பி, அம்மா மூவரையும் அணைத்துக் கொண்டு இனி அப்பாவின் இடத்தில் இருந்து உங்க எல்லோருக்கும் எந்தக் குறையும் இன்றி நான் பார்ப்பேன் . இது அப்பாவின் மீது சத்தியம் என்று கண்ணீர் மல்க சொன்னாள்.
அந்த நிமிடம் சுமதி அந்த வீட்டின் மூத்த மகள் மட்டுமல்லாமல் அப்பாவும் ஆனாள்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.