எழுதியவர்: ஹரிஹர சுப்ரமணியன்
மெய் எழுத்து வார்த்தை: தொழில் தர்மம் /ல்
பிரபல காண்ட்ராக்டர் தர்மலிங்கம் அரசாங்க ஒப்பந்தங்கள் எதுவானாலும் எப்படியாவது அவருக்கு கிடைக்கும் படி செய்து நல்ல சம்பாத்தியம் .
அந்த ஊரில் நீண்ட நாட்களாக ரோடு போட படாமல் இருந்த அந்த காலனியில் ரோடு போட ஒப்பந்தம் கிடைத்து மிக்க சந்தோஷ பட்டார்.
அந்த ஊரிலேயே பல தெருக்கள் இருந்தாலும் நல்ல ரோடு இல்லாமல் பொது ஜனங்கள் மிகவும் சிரமப்பட்டு ஒரு வழியாக ரோடு போட நகராட்சி முடிவெடுத்து மிகுந்த போட்டி களுக்கிடேயே தர்ம லிங்கத்திற்கே காங்ற்றச்ட் கிடைத்தது .
வழக்கம் போல குறைவான சிமெண்ட் , நிறைய மணல் , இவற்றை கலந்து இரவோடு இரவாக ஒரு வழியாக அந்த காலனிக்கு ரோடு போட பட்டது .
சரி வர தண்ணீர் ஊற்றாமல் , தரமற்ற முறையில் ரோடு போட்டதில்
தர்மலிங்கத்திற்கு நல்ல லாபம் கிடைத்தது .
அந்த காலனியின் எதிர் புறம் அவர் எப்போதோ வாங்கி போட்ட பெரிய காலி இடம் நல்ல விலை போகிறது என்று அறிந்து அந்த இடத்தை சுத்தம் செய்து நல்ல முறையில் எல்லை தூண்களை ஊன்றி அரசு ஒப்புதல் பெற்று தனி தனி பிளாட்களாக விற்று மகனுக்கு நல்ல முறையில் கல்யாணம் செய்ய முடிவெடுத்தார் .
அதே பணியாளர்களை வரவழைத்து மகனிடம் அந்த பிளாட்களில்
செய்ய வேண்டிய பணிகளை பட்டியல் போட்டு கொடுத்து அவசரமான வேறு ஒரு காண்ட்ராக்ட் விஷயமாக தலை நகருக்கு சென்று விட்டார் .
அன்னாரது மகன் அடுத்த சில தினங்களில் அந்த காலனி சம்பந்த பட்ட அடிப்படை வேளைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார் .
பழக்க தோஷம் காரணமாக அரசாங்க வேலை க்கு எப்படி தரமற்ற பொருட்களை பயன் படுத்தினார்களோ அது போலவே இந்த காலனி விஷயத்திலும் அவரது கை வரிசை யை காட்ட ஆரம்பித்தார் .
இரண்டு தினங்கள் கழித்து காலை நடை பயிற்சிக்கு போகும்போது அப்படியே அந்த காலனி ரோடு வழியாக செல்ல முற்பட்டு அவரது இரு சக்கர வாகனத்தில் வேகமாக செல்லும் போது சாலை நல்ல பொருட்கள் பயன் படுத்தாத காரணத்தினால் இரு சக்கர வாகனம் சாலையில் பதிந்து வண்டியோடு கீழே விழுந்து ஒரு பெரிய பள்ளத்தில் உருண்டு, அவரது மொபைல் போனும் எங்கோ விழுந்து விட்டு உதவிக்கு எவரையும் அழைக்க கூட முடியாமல் போய் சில மணி நேரங்கள் கழித்து தான் பணியாளர்களால் மருத்துவ மனையில்
சேர்க்க பட்டு கடைசியில் அவர் கால் முறிந்து சில மாதங்கள் கழித்துதான் வீடு திரும்ப வேண்டிய சூழ்நிலைக்கு தள்ள பட்டார் .
முறிந்த கால் எவ்வளோவோ முயற்சி செய்தும் மருத்துவர்களால் சரி செய்ய முடியாமல் போய் விட்டது .
தர்மலிங்கம் போன்ற வர்கள் இனியாவது திருந்தட்டும் .
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.