எழுதியவர்: சினேகிதா ஜே ஜெயபிரபா
மெய் எழுத்து வார்த்தை: தங்கை/ங்
சுபத்ராவின் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்த பவித்ராவின் மனதில் பலவித எண்ண அலைகள் எப்படி கேட்க கேட்டா கொடுப்பாளா இல்லன்னா எதுவும் சொல்லுவாளா என்றே சிந்தித்தவாறு
நாளை மறுநாள் குழுவுக்கு கொடுக்க வேண்டிய 20000 ரூபாய்க்காக தங்கையிடம் ஏதாவது உதவி கேட்கலாம் என்று சென்றாள். தயங்கியவாறே கேட்டாள். ஒரு மாதத்தில் திருப்பிக்கொடுக்கிறேன் என்ற உறுதிமொழியுடன். எடுத்த எடுப்பில் தங்கை சொன்ன பதிலில் ஆடித்தான்போனாள் பவித்ரா
என் புருஷன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறது அவர் பொண்டாட்டியும் பிள்ளைங்களும் சந்தோசமா வச்சுக்கத்தான் வரவங்களுக்கெல்லாம் உதவி செய்வதற்கு இல்லையென
சுபத்ராவின் திருமண நிகழ்வில் மாப்பிள்ளை வீட்டில் பேசிய நகை கொடுக்கத் திணறிய மாமியாரிடம்
தனது 3சவரன் அடுக்கு மாலையை கொடுத்த கணவனிடம் அத்தான் என்ன இப்படி செஞ்சிட்டீங்க கேட்ட தனக்கு தன் கணவன் சொன்ன பதில்மொழி இல்ல பவி நம்ம வீட்டு பொண்ணு அவ வாழ்க்கை நல்லா இருந்தா நமக்கும் சந்தோசம் தானமா நகை நம்ம கிட்ட இருந்தா என்ன அவகிட்ட இருந்தா என்ன என்றார்
இரண்டையும் நினைத்து பார்த்த பவித்ரா மனதினுள் சிரிக்கவா அழவா என்று தெரியாமலே
வறுமை வந்து விட்டால் இப்படித்தான் இருக்குமென தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டாள்
சுபத்ராவும் சராசரி மனுசிதானே தங்கை என்று எண்ணியது தன் தவறே என்றே எண்ணியவாறு வீடு வந்து சேர்ந்தாள் பவித்ரா
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.