எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
மெய் எழுத்து வார்த்தை: கண்
கண். காதலின் ஆரம்ப புள்ளி.
கண்ணும் கண்ணும் சேர்ந்தால் அதாவது சந்தித்து கொண்டால்… இதயம் வேகமாக துடித்தால்… பிறப்பது காதல்.
காதலில் பெரும் பங்கு வகிக்கும் கண் தான் காதலின்
பிறப்பிடம்.
கோயிலில் நேர் எதிரே அவள்
இருந்தாள். நான் கண்ணை திறந்து பார்க்கும் போது என் கண்ணில் மின்னல் போல் தாக்கினாள்.
அவளும் கண்ணை திறந்து பார்த்ததும் அவளுக்கு மின்னலாக நான் இருந்தேன்.
அது ராதா கிருஷ்ணன் கோயில். இந்த கண்களின் விளையாட்டு ராதா கிருஷ்ணன் விளையாடுவது
போல் இருந்தது.
இந்த காதல் உணர்வு இருவருக்கும் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க செய்தது.
கண்டதும் காதல்.
ஆம். காதல் எனும் பூட்டுக்கு
சாவி கண் தான்.
ஆம்.
என் முதல் காதலின் ஆரம்பம்
கண்… கண் மட்டுமே..!
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.