எழுதியவர்: ஆதி தனபால்
மெய் எழுத்து வார்த்தை: பிள்ளை/ள்
‘லொள்லொள்ளெனத்’ தள்ளலுடன் ஞெள்ளலின் வெள்ளொலி …
கள்ளமில்லா வெள்ளை உள்ளமும்,வள்ளியின் வள்ளலன்பும் ஞெள்ளியைத் துள்ளச்செய்தது..
வள்ளியெனும் கள்ளிக்காட்டுக் கள்ளிக்குக் கள்ளிப்பாலையுள்ளே தள்ளிவிடுமுன் , தள்ளாடித் தள்ளாடி நடந்தாலும் வெள்ளிக்கிழமையில் அள்ளலிலிருந்து புள்ளையவளை அள்ளிக்கொண்ட நாள் வள்ளியப்பனுக்குத்தான் தெள்ளத் தெளிவு…
சள்ளைப்படாமல் கொள்ளையாசையாய் கிள்ளையைப்போல பிள்ளையை வளர்த்தார்…
புள்ளிமானின் துள்ளலுடன் ஒள்ளொளியானவள் வள்ளி…
வள்ளியின் ஒள்ளொளி எள்ளலெனும் இருளால் சள்ளைப்படுத்தப்பட்டு தளைதட்ட…
எள்ளியவர்களுக்கு முற்றுப் புள்ளியிட நினைத்தவள்,பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களுக்கு தனியாளாய்க் கரம் நீட்டி, தாளாற்றித் தந்த பொருளையெல்லாம் வேளாண்மையாக மாற்றி முதல் பயணத்தைத் தொடர்ந்தாள்…
பல பெற்றோர்களின் தள்ளையாய்….
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.