எழுதியவர்: திவ்யா
மெய் எழுத்து வார்த்தை: பணம்/ம்
பத்மா, வா போலாம்! என்ற தோழியின் வார்த்தைகளால் சிந்தனை கலைந்து நிமிர்ந்த பத்மா கைக் கடிகாரத்தைப் பார்த்து பெருமூச்செறிந்தாள். இந்நேரம் வருண் வந்திருப்பான். என்னையும் நான் வாங்கி வருவதாகச் சொன்ன நோட்டுப்புத்தகத்தையும் எதிர்பார்த்துக் காத்திருப்பான் என எண்ணியபடியே தோழியுடன் நடந்தாள்.
பத்மா கைபிடித்த ஒன்பதாவது வருடத்தில் கணவனை இழந்து பெற்றோருக்கு சுமையாக இருக்க விரும்பாமல் தன் ஒரே பிள்ளையோடு சுயமாய் வாழ்பவள். கணக்கர் பணி கணிசமான சம்பளம் என்ற போதிலும் மாதக் கடைசி கொஞ்சம் கையைக் கடிக்கவே செய்யும்.
இதோ இன்னும் இரண்டு நாளை ஓட்டினால் போதும் அடுத்த மாதம் வந்துவிடும். ஆனால் அதற்குள் மகன் நோட்டு கேட்டு கெஞ்சவும் செய்வதறியாமல் திகைத்து நிற்கிறாள். ஏதேதோ யோசனையோடு வீட்டினுள் நுழைந்தவளை இடைமறித்த வருண் அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் ஏதும் பேசாமல் கட்டிப்பிடித்து முத்தமிட்டு நகர்ந்தான்.
கடவுளே! என கண்மூடி அழுதாள் பத்மா.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.