மெய் எழுத்து போட்டி கதை: கண்ணைக் கவரும் பந்து 

by admin 2
64 views

எழுதியவர்: ருக்மணி வெங்கட்ராமன் 

மெய் எழுத்து வார்த்தை: பந்து/ந்

“மணி..” 

“அம்மா..  விளையாடறேன்” 

அவன் கையில்  வண்ண பந்து.

“இது ஏதுடா?”

” பக்கத்து டவுனில் இருந்து பாட்டி வாங்கி வந்தாங்க.‌ ‘பூமரங்’ போல தூக்கிப் போட்டா திரும்ப நம் கையில் வந்துவிடும்.”

 வேலை  செய்யும் பெண் மகேஸ்வரியின் மகன் செல்வம்  ஏக்கத்துடன் பந்தை பார்த்துக் கொண்டிருந்தான். 

“டேய் .. அந்த பையனிடம் கொஞ்ச நேரம் கொடுடா.”

 மணியின் பாட்டி”நல்லா இருக்கு நீ சொல்றது. அவன் தொட்டதை என் பேரன் தொடலாமா?”

ஒன்றும் பேசாமல் உள்ளே சென்றாள் மணியின் அம்மா பத்மினி.

  பாட்டியும் பேரனும், இரண்டு நாட்கள் ஒரு கல்யாணத்திற்கு சென்று விட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். 

“டிரைவர் காரை நிறுத்துங்க”  கத்தினான் மணி. 

செல்வம் மற்ற குழந்தைகளுடன்  பந்தை வைத்து விளையாடுவதைப் பார்த்து கோபத்துடன் “திருட்டுப் பயலே..”என்று கத்தியபடி  கீழே தள்ளி விட்டு,  பந்தை பறித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான்.

வீட்டில் தன் பந்தை பார்த்ததும் உண்மை புரிந்தது.

“என்னுடையதை திருடி விட்டான் என்று நினைத்தேன்.”

” நீ தான் வழி பறி திருடன்.அவனில்லை.”என்று அம்மா கூறியதும் தன் செயலுக்கு வெட்கப் பட்டான்.

ஓடி போய் எல்லா குழந்தைகளையும் அழைத்து மன்னிப்பு கேட்டான்.

மணி மாறியதை கண்டு தாயுள்ளம் மகிழ்ந்தது.

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!