எழுதியவர்: நா.பா.மீரா
மெய் எழுத்து வார்த்தை: அலைகள்/ள்
நுரைத்துப் பொங்கும் அலைகளை வெறித்தபடி எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தாள் என்று தெரியாது. தன் தோள்களை யாரோ பற்றுவது மூளைக்கு எட்டிய வேகத்தில் தன்னிச்சையாய்த் திரும்பினாள் அந்தப் பெண்.
அம்மா பசிக்குது …என்று அழுதது ஒரு பெண் குழந்தை ..மூன்று வயது இருக்கலாம்.
‘அம்மா’ என்ற அழைப்பு உயிர் வரை தாக்க அந்தக் குழந்தையை அள்ளிக் கொண்டு கையில் இருந்த காசில் பால், பிஸ்கட் வாங்கிக் கொடுத்து …வாழ்வதற்கு வழி தேடித் புறப்பட்டாள்…அருமைக் கணவனையும் , கைக்குழந்தையையும் ….சுனாமிக்குக் காவு கொடுத்து …வாழ்வே சூனியமாகி நின்ற தினக்கூலிக்கு மாரடிக்கும் அங்கம்மாள்.
அங்கே கடலில் அலைகள் ஆர்ப்பரிப்புடன் நெடுந்தொலைவு ஓடியோடி மீண்டன.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.