மெய் எழுத்து போட்டி கதை: சாமி சரணம் 

by admin 2
13 views

எழுதியவர்: நா.பா.மீரா 

மெய் எழுத்து வார்த்தை: பக்தி/க்

புவனாவுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை.கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக நியம நிஷ்டைகளோடு, குருசாமியாக இருந்து சபரிமலை யாத்திரையை  வழிநடத்திக் கொண்டிருந்த கணவர் முரளி ,சென்ற வருடம் யாத்திரை முடிந்து சில மாதங்களில் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

சாமி சரணம் … புவனாம்மா … எங்களுக்கு குருசாமின்னா அது முரளி ஐயாதான் .. இந்த வீட்டுல பூஜை செஞ்சுதான் நாங்க யாத்திரை புறப்படணும்னு ஆசைப்படறோம்…..

இவங்க ஆசையெல்லாம் தப்பேயில்ல … சபரீஷ்னு ஆசையா பேர் வச்சோம்..சினிமாவுல அசிஸ்டென்ட் டைரக்டராகணும்னு…குடி,  சிகரெட்னு ஒரு கெட்ட பழக்கம் பாக்கியில்ல….அவன் கையால இருமுடி வாங்கிக்கிட்டு மலைக்குப் போகணும்னு சொல்றாங்களே …அவள் தயங்க …

சபரீஷ் தம்பிகிட்ட நாங்களே பேசிட்டோம்மா … ஒத்துக்கிட்டாரு ….

புவனாவால் ஒன்றுமே செய்ய முடியவில்லை .எப்படி ஒத்துக்கிட்டான் …ஒரே குழப்பம் …

அந்தச் சமயம் …சபரீஷ் வேலை பார்த்த யூனிட்டில் ..சபரிமலை ஷாட் …ஒன்று எடுக்கத் திட்டமிட்டிருந்தது பாவம் புவனாவுக்குத் தெரிய வாய்ப்பில்லை. 

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!