எழுதியவர்: நா. பத்மாவதி
மெய் எழுத்து வார்த்தை: ஐந்து பெற்றால்/ந்
மனைவி திடீரென இறக்க
செய்வது அறியாது திகைத்த முத்துவுக்கு நம்பிக்கை கொடுத்து நளினியும், அனுவும் பொறுப்பேற்றனர்.
முத்துவுக்கு மனைவி இறந்த கவலையை விட இந்த ஐந்து பெண் குழந்தகளை எப்படி காப்பது என்ற கவலையே மேலோங்கியது.
“அக்கா சாப்பாடு ரெடியா” மூவரும் கோரஸாக கேட்டபடி வந்தனர் . கல்லூரியில் படிக்கும் கலையும், பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் அபியும், அகிலாவும் .
தங்கை அனுவும், அப்பாவும் பிரைவேட் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள்.
“வாங்கப்பா அனுவோடு சாப்பிடலாம் வாங்க” என்றபடி தானும் உட்கார்ந்தாள் நளினி.
“எவ்ளோ பொறுப்பான குழந்தைகள்மா நீங்க” என்றவர் தொடர்ந்து “ஐந்து பெற்றால் ஆண்டி என்பது,
ஆடம்பரத் தாய், பொறுப்பற்ற தந்தை, ஒழுக்கமற்ற மனைவி, துரோக உடன்பிறப்புகள், பிடிவாதப் பிள்ளைகள் என்ற ஐவரைப் பெற்றால் அரசனும் ஆண்டியாக மாறுவான் என்பதை தவறாக ஐந்து பெண்கள் என்கிறோம்” என்றார்.
“இப்பொழுது நான் ஐந்து பெண் தேவதைகளைப் பெற்றவன்” என்ற பெருமித மிடுக்கோடு நடந்தார் முத்து.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.