எழுதியவர்: குட்டிபாலா
மெய் எழுத்து வார்த்தை: மாற்றம்/ற்
“என் பிறந்த நாளையும் பார்ட்டியையும் மறந்து விட்டாயா?” என்ற சுகுணாவிடம் “வந்து கொண்டிருக்கிறேன்” என்றான் முகுந்த்.
அவன் கொடுத்த டப்பாவைத் திறந்தவள் “இதேபோன்று ஒரு ஜோடி வளையலை அண்ணன் மாரிமுத்துவும் பரிசளித்துள்ளார்” என்று கைகளைக்காட்டி இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தினாள்.
மற்றவர்களிடம் “இந்த முகுந்தும் நானும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளோம். உங்கள் ஆசியோடும் ஆதரவோடும்” என்றதும் அனைவரும் கைதட்டி வரவேற்றார்கள்.
பார்ட்டி முடிந்ததும் மாரிமுத்துவை தனியாக அழைத்து நகைக்கான பில்லை தந்து “இதையும் அவளிடம் கொடுத்து விடுங்கள்” என்றான் முகுந்த்.
கண்ணீர் வழிய “தங்கைக்கு நகை வாங்கப் போதிய பணம் இல்லை. இந்த வளையல்களை நீங்கள் வாங்குவதைப் பார்த்து உங்களைப் பின் தொடர்ந்தேன். பஸ்ஸில் கூட்ட நெரிசலை சாதகமாக்கி கொண்டு திருடிவிட்டேன். மன்னித்து விடுங்கள் சுகுணாவிடம் சொல்லி விடாதீர்கள்” என்றான்.
தவறை உணர்ந்த மாரியப்பன் இப்போது முகுந்தின் கம்பெனியிலேயே கணக்கராக வேலை செய்கிறான்.
ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதோவொரு மாற்றம் உண்டல்லவா!
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.