மெய் எழுத்து போட்டி கதை: தொடர்பு எல்லைக்கு அப்பால் 

by admin 2
35 views

எழுதியவர்: நா.பா.மீரா 

மெய் எழுத்து வார்த்தை: செல்/ல்

அம்மா ..எப்ப ஊருக்குப்போவோம் ,போனுல டவர் கிடைக்கல,தாயிடம் புலம்புகிறான் அர்ஜுன். 

கண்ணா,உனக்கு டெங்கு காய்ச்சல் வந்தப்போ குலதெய்வத்துக்கு நேர்ந்துக்கச் சொன்னேன். கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோயேன் ,சொன்ன சித்தியை எதிர்க்கமுடியாமல் தாயை முறைத்தான்.

அர்ஜுன் வாடா,கும்பக்கரைக்குப் போய்க் குளியல் போட்டுட்டு வரலாம்,ஜாலியா இருக்கும்.

யாதவ் சொன்ன மாதிரியே புத்துணர்ச்சியாக இருந்தது.

நீ எப்படிடா செல் போன் டவர்  கூட இல்லாத இந்த கிராமத்துல சமாளிக்கிற?

ஒரு நாள் வகுப்பில எங்க தமிழ் மிஸ், தன் பேருலயே ‘செல்’லுன்னு வச்சிருக்கிற இந்த போன்களோடான நம்ம வாழ்க்கை கூண்டுக்கிளி போலத்தான்.தேவைக்கு அதிகமா அடிமையானா சுதந்திரக் காற்றை சுவாசிக்கமுடியாம மூச்சு முட்டிடும் .

நமக்கு அத்தியாவசியமானதெல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் போயிடும். மொபைல் போன் தேவைக்கு மட்டும்தான் புரிஞ்சுதா ….அவங்க சொன்னது ஆழமா பதிஞ்சிட்டு ..அதனால நா ரொம்ப அலட்டிக்கிறதில்ல..

யாதவ் மிஸ் சொன்னது கரெக்டுதானோ ..சிந்திக்கத் தொடங்கினான் அர்ஜுன்.

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!