மெய் எழுத்து போட்டி கதை: பிச்சைப்புகினும் கற்கை நன்றே

by admin 2
30 views

எழுதியவர்: சினேகிதா ஜே ஜெயபிரபா 

மெய் எழுத்து வார்த்தை: பிச்சை/ச்

பத்தாம் வகுப்பு மாநிலத்தில் முதல் மாணவியாக அனைத்து பாடத்திலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்த பிளெஸிபாவின் தாய் ஜெயராணியின் மனவோட்டம் ஓராண்டுக்கு பின் சென்றது

பத்தாம் வகுப்பு பள்ளி திறக்க இன்னும் ஒருவாரமே இருக்கின்றது அம்மா எனக்கு சமூக அறிவியல் படிச்சிட்டு வரச்சொல்லியிருக்காங்க கைடு வாங்கி கொடுங்க என மகள் தினமும் கேட்கிறாள் இன்று அழுதுவிட்டாள் ஐந்து பாடம் படிக்கணும் நான் எப்படி படிப்பேன் இன்னும் நீங்க வாங்கி கொடுக்கவில்லையென்று எல்லா பாடத்திலும் 95க்கு மேல் மார்க் எடுக்கும் தன் மகள் அம்மாவால் வாங்கி கொடுக்க முடியாதுன்னு பழைய கைடு வாங்கி வைத்திருந்தாள் சமூக அறிவியல் ஆசிரியை டாண் கைடுதான் வாங்க வேண்டுமென சொல்லிவிட்டார்கள் அது அவளுக்கு கிடைக்காததால் இன்று கண்ணீர் வடிக்கும் நிலை

என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆறேழு மாதமாக கணவனுக்கு தொழிலுமில்லை வருமானம் எதுவுமில்லாமல் வயிற்றுப்பாடே பெரும்பாடாய் கழிகையில் தொழிலுக்காக வாங்கிய கடன்காரர்களுடைய நெருக்கடி ஒருபக்கம் யாரிடமும் உதவி கேட்க இயலாநிலையில்முகநூலில் பொதுவாக ஒரு போஸ்ட் போட்டாள் யாராவது என் மகள் படிப்பதற்காக சமூகவியல் கைடு புத்தகம் வாங்கி கொடுங்களெனமோசமான கமெண்ட்கள் பலவிதமாய் அத்தனையும் சகித்துக் கொண்டாள் மகளின் படிப்புக்காக நல்ல உள்ளம் கொண்ட ஒரு நபர் அருகிலுள்ள புத்தக நிலையத்துக்கு சென்று என்னை தொடர்பு கொள்ளுங்கள் உங்கள் புத்தகத்துக்கான தொகையை நான் அனுப்பிவிடுகிறேனென கூறியதன்படி புத்தகம் வாங்கி கொடுத்தாள்நாளைய மாவட்ட ஆட்சியராகவிருக்கும் மகள் நன்றாய் கற்பதற்காக பிச்சைப் புகினும் பிழையில்லை என்றே எண்ணி பெருமகிழ்வடைந்தாள்

முற்றும்.

மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!