எழுதியவர்: சசிகலா விஸ்வநாதன்
மெய் எழுத்து வார்த்தை: பல் /ல்
பல் விதமான பிரச்சனை; எல்லோருக்கும். எனக்கு பல் பிரச்சினை. பல்லினால் அல்ல; பல்லே பிரச்சனை. பல் வலி! தாங்காமல்தான், பல்லாற்றானும் புலம்பல், அலம்பல், அழுதல்தான்! செய்கிறேன். பல் வலி பல்லுக்கு மட்டுமல்ல. கல் போல் கன்னம் வீங்க, சொல்லும் சொல்லிலும் குளறல் குரல். வலியுடன் மல்லுக்கட்ட முடியாமல் பல் மருத்துவரிடம் போக;பல்லைக் கழற்றும் வேகத்தில், அருகில் இருக்கும் பல்லும் கழன்று “கல்” என்ற சத்தத்துடன், பேசினில் விழுந்தது. பல் மருத்துவர் இரண்டு பல்லுக்கும் போட்ட பில் கண்டு மயக்கத்தில் நான்; பல் ஆசனத்தில் இருந்து கட்டாந்தரையில் விழ; நான் இப்போது அப்போல்லோ மருத்துவமனையில்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.