எழுதியவர்: குட்டிபாலா
மெய் எழுத்து வார்த்தை: வெள்ளம்/ள்
ஃபெங்கல் புயலால் கீழ்த்தளத்தில் வெள்ளம் புகுந்ததால் குமுதாவும் தாயார் பத்மாவும் தவித்தனர். பத்மா காய்ச்சலாலும் குளிராலும் நடுங்கினாள்.
மேற்தளத்தில் வசிக்கும் மாமன் குடும்பத்தாரோடு பத்து வருடமாக பேச்சு வார்த்தை இல்லை. சற்று யோசித்தவள் மாடிக்கு சென்று கதவைத் தட்டினாள்.
எதுவும் பேசாமல் நடுங்கும் பத்மாவை தன் கட்டிலில் படுக்க வைத்தான் மணவாளன்.
நள்ளிரவில் “அண்ணா அண்ணா” என்ற முனகல் கேட்டு அத்தையினருகே பயத்தோடு நின்ற குமுதாவிடம் போனான்.
பத்து வருடமாக பேசாதவன் “குமுதா, ஆம்புலன்ஸை கூப்பிடலாமா?” என்றதும் அழுதாள்.
“வேண்டாம். உன் அப்பாவைப் பார்க்கும்வரை எனக்கு எதுவுமாகாது” என்றாள் பத்மா.
ஊரிலிருந்து திரும்பிய மாமனிடம் “மாமா. அம்மா கூப்பிடுகிறார்கள்” என்ற குமுதாவை முறைத்தவரிடம் மணவாளன் “அப்பா, நான்கு நாட்களாக அத்தை உங்களையே நினைத்து புலம்புகிறாள்” என்று கையைப் பிடித்திழுத்து வந்தான்.
“இந்த வெள்ளத்தோடு பழசையெல்லாம் மறந்து விடுவோம் அண்ணா” என்றவளிடம் “காபி கிடைக்குமா பத்மா?” என்றதும் நால்வரும் சிரித்தனர்.
முற்றும்.
மெய் எழுத்து போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.